[X] Close
JUST IN
 • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
 • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
 • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
சினிமா 05 Aug, 2017 12:39 PM

சூர்யா படத்தை கைப்பற்றிய ரகுல் ப்ரீத் சிங்

rahul-breathe-singh-who-captured-surya-s-film

சூர்யா - செல்வராகவன் இணையும் படத்தில் நடிக்க நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில்  ‘தானா சேர்ந்த கூட்டம்’  படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்புகள் முடியும் நிலையில் உள்ளதையடுத்து அடுத்த படம் குறித்த செய்திக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர், இந்நிலையில் சூர்யா-செல்வராகவன் கூட்டணி முதன்முறையாக கைகோர்க்கும் படத்தை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு – எஸ்.ஆர்.பிரபு இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். படத்தில் நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் ரகுல் ப்ரீத் சிங், சூர்யாவுடம் விரைவில் சேர்ந்து நடிக்க இருப்பதாக பேட்டி அளித்துள்ளார்.

ரகுல் தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கக்தில் ‘ஸ்பைடர்’ படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கில் என இரு மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. மேலும் கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் தமிழில் நடித்த சில படங்கள் கைகொடுக்காத நிலையில் இந்த இரண்டு படங்களும் தனக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என்று நம்பியுள்ளார்.

மேலும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது இணையும் படத்திலும் நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close