[X] Close
JUST IN
 • BREAKING-NEWS நிலவேம்பு கசாயம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலுக்கு அரசு சித்த மருத்துவர்கள் கண்டனம்
 • BREAKING-NEWS 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் முழுவதும் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS தீபாவளி டாஸ்மாக் மது விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20%குறைந்தது
 • BREAKING-NEWS வித்தியாசமாக பேச வேண்டும் என்பதற்காகவே நிலவேம்பு கசாயம் குறித்து கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார்: இல.கணேசன்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும்: தமிழிசை
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீரில் காலை 6.40 மணியளவில் நில அதிர்வு- ரிக்டர் அளவு கோலில் 4.7ஆக பதிவு
 • BREAKING-NEWS தஞ்சை மாவட்டத்தில் 34 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஆட்சியர் அண்ணாதுரை
 • BREAKING-NEWS ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 12,000 கனஅடியில் இருந்து 11,000 கனஅடியாக குறைந்தது
 • BREAKING-NEWS தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதால் சென்னை நகரம் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது
 • BREAKING-NEWS சென்னை : பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 10 பேருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
 • BREAKING-NEWS 68சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் நவ.8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது
 • BREAKING-NEWS இமாச்சலபிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கு 68 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக
 • BREAKING-NEWS சங்கரன் கோவிலில் பிவிசி பைப் கிடங்கில் தீ விபத்து; தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்
 • BREAKING-NEWS தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிப்பு
சினிமா 03 Aug, 2017 06:48 PM

உடலில் இத்தனை ஆபரேசன்களா? ஒவ்வொரு நொடியும் தன்னைத்தானே செதுக்கிய அஜீத்!

ajith-who-carved-himself-every-moment

25 ஆண்டுகளுக்கு முன் ஒரு சாதாரண பைக் மெக்கானிக் ஆக இருந்த அஜித்தை இப்போது தல என உச்சத்தில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் தமிழக ரசிகர்கள்!

மலைபோல உயர்ந்து நிற்கும் அஜித்தின் இந்தப் புகழுக்கு காரணம் அவர் உழைப்பாலும், திட்டமிடல்களாலும் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டதுதான்!

’என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் சில விநாடிகள் வந்துபோனதுதான் அஜித்தின் முதல் சினிமா பிரவேசம். ஆனாலும், `பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குப் படம்தான் அஜித்குமாரின் மிகச்சரியான அறிமுகப் படம். கொல்லப்புடி ஸ்ரீனிவாச ராவ், கொல்லப்புடி மாருதி ராவ் ஆகியோர் இயக்கத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் 1992-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கியது. 1993 ஆம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ரிலிஸானது. ஆக, தமிழ் சினிமாவில் இன்றோடு 25 ஆண்டுகளை இன்றோடு கடக்கிறார் அஜித்! 

பிரேமம் படத்திற்கு பிறகே தமிழில் அமராவதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே உள்ளிட்ட படங்களில் இரு நாயகர்களில் ஒருவராகவே அஜீத் நடித்து வந்தார். 

1995 வது ஆண்டில் வெளியான ஆசை திரைப்படம் அஜித்திற்கு முதல் வெற்றியை கொடுத்தது. 1996 அகத்தியன் இயக்கிய காதல்கோட்டை அஜித்திற்கு சினிமாவில் நிரத்தர இடத்தை அமைத்துக் கொடுத்தது. இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். அதன்பிறகு நடித்த அரைடஜன் படங்களும் தோல்வியைத் தழுவின. சரண் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டில் வெளியான காதல் மன்னன் திரைப்படம் அஜித்திற்கு வெற்றியைத் தேடித்தந்தது. 1999 ஆம் ஆண்டு வெளியான வாலி திரையுலகில் அஜித்திற்கு வலிமையை கொடுத்தது. அதே ஆண்டு வெளியான அமர்க்களம் ’தல’யாக உருவாக அச்சாரம் அமைத்துக் கொடுத்தது. இடையில், மீண்டும் மோட்டார் பந்தயங்களில் அதிக முனைப்புக்காட்டியதால் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். 

2001 ஆம் ஆண்டு தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார். ரெட், ராஜா, ஆஞ்சனேயா, என்னைத் தாலாட்ட வருவாளா, ஜனா, ஜி, பரமசிவன், திருப்பதி, என சில திரைப்படங்கள் தோல்வியைத் தழுவின. இடையில் வில்லன், வரலாறு ஆகிய படங்கள் மட்டுமே அஜித்திற்கு வெற்றியைத் தேடித் தந்தன. அந்த கால கட்டத்தில் சாமி, காக்க காக்க, கஜினி ஆகிய திரைப்படங்களில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பல்வேறு காரணங்களுக்காக தவிர்த்துவிட்டார் அஜித். அடுத்தடுத்து ஒரு வெற்றி, இரண்டு தோல்வி என்ற விகிதத்தில் அஜித் படங்கள் அமைந்தாலும் ரசிகர்களின் எண்ணிக்கை மட்டும் அவருக்கு அதிகரித்தே வந்தது. ஆரம்பம் படத்தில் இருந்து வீரம், என்னை அறிந்தால், வேதாளம் என தொடர் ஹிட்டுகளை கொடுத்து வரும் அஜித் தனது 25வது ஆண்டு திரை வாழ்வில் 57வது படமான விவேகம் படத்தில் நடித்துள்ளார். விரைவில் ரிலீசாக இருக்கும் இப்படத்தின் டீசர், மற்றும் ட்ரெய்லர் இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது.

தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கு சிறு பிரச்னை என்றாலும் அதை தெரிந்து கொண்டால் உடனே அதைத் தீர்க்க உதவக்கூடியவர் அஜித்.  
3 மேஜர் ஆபரேசன்கள் உட்பட 20 ஆபரேசன்களைத் தாங்கி இருக்கிறது அஜித்தின் உடல். ஆகையால் சண்டைக்காட்சிகளில் 'டூப்' போட்டுக்கொள்ளலாம் என இயக்குநர்கள் கூறினாலும் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் தானே ஏற்று நடிப்பவர் அஜித். பரமசிவன்' படத்தில் நடிப்பதற்காக தனது உடலை வருத்தி இருபது கிலோ எடையைக் குறைத்தார். விவேகம் படத்தில் கட்டுக்கோப்பான உடல் எடைக்காக சிக்ஸ்பேக் தோற்றத்திற்கு மாறினார். இதை நம்பமுடியாத பலரும் மார்ஃபிங் செய்யப்பட்ட போட்டோ என பரப்பினர். ஆனால் அது அஜித்தின் உண்மையான போட்டோ என தெரிய வந்தபிறகு வியக்கிறார்கள் பலரும்.

பல்வேறு போராட்டங்கள், பற்பல தோல்விகள் என 25 ஆண்டுகளை கடந்துவிட்ட அஜித் இன்று தமிழ்திரையுலகமே கொண்டாடப்படும் நாயகனாகவும், பிறருக்கு வழிகாட்டியாகவும் திகழ்வதற்கு காரணம், 'பில்லா' படத்தில் அவர் பேசிய டயலாக் போலவே அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஏன் ஒவ்வொரு நொடியும் அவராகவே செதுக்கியதுதான்.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close