[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது நடிகர் சங்க பொதுக்குழு: ரஜினி, கமல், அஜித் பங்கேற்க வாய்ப்பு

siaa-general-body-meeting

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில். நட்சத்திர கிரிக்கெட் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. 2014-15ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு வழக்குகளை துணை தலைவர் கருணாஸ் கூட்டத்தில் சமர்ப்பிக்கிறார்.

இதைத்தொடர்ந்து பொருளாதார திட்டம் குறித்து பொருளாளர் கார்த்தியும், நலத்திட்டங்கள் பற்றி பொதுச்செயலாளர் கார்த்தியும் விவரிக்கின்றனர். புதிய நிர்வாகிகள் பெறுப்பேற்றபின் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் ராதாரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் பல கேள்விகளை முன் வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றிற்கு பதிலளிக்க புதிய நிர்வாகிகளும் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close