[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

கீர்த்தி சுரேஷ், சூர்யா ஜோடியானது இப்படித்தான்!

vignesh-sivan-talks-about-thana-serntha-koottam

சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், செந்தில் உட்பட பலர் நடித்துள்ள படம், ’தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். 

ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படம் பற்றி விக்னேஷ் சிவன் கூறும்போது, ‘இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக நங்கள் சொல்லவில்லை. வெளியே அப்படி தகவல் வெளியானது. சூர்யாவுடன் இதுவரை நடிக்காத ஒருவர், ஹீரோயினாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்ததால் கீர்த்தி சுரேஷை ஹீரோயினாகத் தேர்வு செய்தோம். கீர்த்தி, ஒரு மிடில் கிளாஸ் பெண்ணாக வருகிறார். இது சூர்யாவுக்காக உருவாக்கப்பட்ட கதை.  இதுவரை நடிக்காத கேரக்டரில் அவர் நடித்திருக்கிறார். முன்னாள் ஹீரோ கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் கேரக்டரை வில்லன் என்று சொல்ல முடியாது. அது வேற மாதிரி இருக்கும். அனிருத் இசையில நானே அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறேன்’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close