[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு - நடிகை காவ்யா மாதவனிடம் விசாரணை

malayalam-actress-abduction-case-dileep-s-wife-kavya-madhavan-interrogated-by-officials

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகை காவ்யா மாதவனிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தினர். 

கேரளாவில் நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்‍கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யாமாதவனிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அலுவாவில் உள்ள திலீப்பின் வீட்டில் வைத்து காவ்யாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரின் கடந்த கால செயல்பாடுகள் பற்றி காவல்துறையினர் கேள்விகள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே நடிகர் திலீப்பை வரும் 8 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி உள்ள பல்சர்சுனில் உள்ளிட்டோருக்கு நடிகை காவ்யா மாதவன் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close