[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமெரிக்காவின் வால்மார்ட் உள்பட இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS ரஜினியின் அரசியல் பிரவேசம் காலம் கடந்தது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

தேசிய விருது பெற்ற படத்திற்கு தமிழக அரசின் விருது இல்லை: சீனு ராமசாமி வருத்தம்

seenu-ramasamy-s-sadness-national-award-is-not-a-tamil-nadu-award

தமிழக அரசு அறிவித்திருக்கும் திரைப்பட விருதுகள் மீது திரைப்படத்துறையினர் பலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

தேசிய விருது பெற்ற தன்னுடைய தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு மாநில விருது கிடைக்காதது வருத்தமளிப்பதாக முன்னணி இயக்குநரான சீனு ராமசாமி டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். முன்னதாக, அழகர்சாமியின் குதிரை படத்திற்கு விருது கிடைக்காதது பற்றிய வருத்தத்தை இயக்குநர் சுசீந்திரன் சில தினங்களுக்கு முன் அறிக்கையாக வெளியிட்டார்.

சீனு ராமசாமி இயக்கி 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. இப்படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணன் சிறந்த நடிகைக்கான விருதையும், சீனு ராமசாமி சிறந்த இயக்குனருக்கான விருதையும், கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான விருதையும் பெற்றனர். ஆனால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் விருதுப் பட்டியலில் தென்மேற்கு பருவக்காற்றுக்கு இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close