[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

இளம் இயக்குனரை வெகுவாக பாராட்டிய பாரதிராஜா

bharathi-raja-praises-young-director

உறியடி இயக்குனர் விஜயகுமாரை இயக்குனர் இமயம் பாரதி ராஜா வெகுவாக பாராட்டினார்.

சாதித் தலைவர்களின் மனதில் எப்போதும் எரிந்துக் கொண்டிருக்கும் அரசியல் வேட்கையையும், சுயநலத்தையும் தோலுரித்துக் காட்ட முயன்ற படம் ‘உறியடி’.விஜய குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கார்த்தி சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் மூலம் தயாரிக்கப்பட்ட "மேயாத மான்" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இயக்குனர் பாரதி ராஜா, உறியடி படத்தை வெகுவாக பாராட்டினார். அவர் கூறும்போது, " உறியடி படத்தை பார்த்ததுமே வியந்துவிட்டேன். எப்படி இப்படி ஒரு சிறப்பான படத்தை உருவாக்க முடியும் என எனக்கு நானே கேள்வி கேட்டுக்கொண்டேன். எந்தவித சிறு அபத்தமும் இல்லாமல் படம் முழுக்க வியக்கும்படியாக இருந்தது. நீண்ட நாளாக இந்த படத்தின் இயக்குனர் விஜயை சந்திக்க வேண்டும் என்று இருந்தேன், இந்நிகழ்ச்சி மூலம் நேரில் அவரை சந்தித்து விட்டேன். அவரை சுற்றி நடக்கும் சம்பவங்களை அவர் திறம்பட படமாக்கியுள்ளார்" என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close