[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
  • BREAKING-NEWS “ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது
  • BREAKING-NEWS “ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி

டிரைலர் இல்லை.... புதுசா பண்ணுவோம்...இது ஷாருக் ஸ்டைல்

jab-harry-met-segal-movie-sharukh-khan-movie-trailer

கிங் கான் என்ற அழைக்கப்படும் ஷாருக்கான், அனுஷ்கா சர்மா இணைந்து நடித்துள்ள "ஜாப் ஹாரி மெட் சிஜெல்" என்ற படத்தின் டிரைலர் வெளியிடப்படாது என தயாரிப்பு நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

தனது திரைப்படங்களின் புரமோஷன்களில் வித்தியாசத்தை காட்ட வேண்டும் என விருப்பப்படும் ஷாருக்கான் புதிய படத்தின் டிரைலர்களை வெளியிட வேண்டாம் என உத்தரவிட்டதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக படத்தின் பிரதான கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் 30 நொடி ஓடக்கூடிய காட்சி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை படத்தின் முதல் ப்ரோமோவும், புதன்கிழமை இரண்டாவது ப்ரோமோவும் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த வார இறுதியில் படத்தின் பாடல் காட்சிகளையும் வெளியிட முடிவு செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தினர் கூறியுள்ளனர். மேலும் இந்த யோசனையை ஷாருக்கான் கூறியதாகவும், இந்த முயற்சிக்கு பின் இதே பாணியே ட்ரெண்டாக அமையும் மாறிவிடும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால் இதற்கு முன்பே விஜய் ஆண்டனி சைத்தான் படத்தின் 5 நிமிட காட்சிகளையே வெளியிட்டு புதிய டிரண்டை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close