[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

இனி பாட மாட்டேன்: கானா பாலா திடீர் முடிவு!

kanna-bala-decide-to-quiet-singing-song

சினிமாவில் பாடுவதை இந்த வருடத்துடன் நிறுத்திக்கொள்ளப் போவதாக பாடகர் கானா பாலா கூறியுள்ளார்.

’அட்டகத்தி’ படத்தில், ’ஆடி போனா ஆவணி, ’நடுக்கடலுல கப்பலை தள்ள முடியுமா?’, ’உதயம் என் எச் 4’ படத்தில், ‘ஓரக்கண்ணால...’, ‘சூது கவ்வும்’  படத்தில் ’காசு பணம் துட்டு...’ உட்பட ஏராளமான பாடல்களை பாடியிருப்பவர் கானா பாலா. 
அவர் கூறும்போது, ‘எனக்கு இப்போது 48 வயசு ஆகிறது. எனது பிறந்த நாள் தீர்மானமாக, இந்த வருடத்தோடு சினிமாவில் பாடுவதை நிறுத்திவிட முடிவு செய்திருக்கிறேன். இந்தளவுக்கு நான் பிரபலமாக ஆகியிருக்கிறேன். போதும் என்று முடிவு செய்துவிட்டதால் அடுத்தவர்களுக்கு வழிவிட்டு இந்த முடிவை எடுத்திருக்கிறேன். நான் பாடும் பெரும்பாலான பாடல்களை நானே எழுதியிருக்கிறேன். இனி அப்படி எழுதமாட்டேன். நிறைய பேர் அர்த்தமில்லாத வார்த்தைகளை எழுத சொல்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை’ என்று கூறியுள்ளார். 
கானா பாலா சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்பது பலர் அறியாத விஷயம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close