[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

இசையமைப்பாளருக்கு விவாகரத்து

famous-music-director-got-divorce

தமிழில் பாரதிராஜா இயக்கிய ’பொம்மலாட்டம்’, கமல்ஹாசன் நடித்த ’தசாவதாரம்’ படங்களுக்கு இசை அமைத்தவர் ஹிமேஷ் ரேஷ்மியா. இந்தி படங்களுக்கு இசை அமைக்கும் அவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் கோமல் என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஸ்வயம் என்ற மகன் உள்ளார். ஹிரேஷும் நடிகை சோனியா கபூரும் காதலித்துவருவதாகக் கூறப்பட்டது. இதனால் அவருக்கும் கோமலுக்கும் மோதல் ஏற்பட்டது.

பின்னர் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன் விவாகரத்து கேட்டு இரண்டு பேரும் பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 2 பேருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close