[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

பேஸ்புக்கில் எழுதிவிட்டு சினிமா தயாரிப்பாளர் தற்கொலை!

cinema-producer-atul-thafkir-suicide

மனைவி கொடுமைப்படுத்தியதாகக் கூறி சினிமா தயாரிப்பாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் புனே நகரை சேர்ந்தவர் அதுல் தப்கிர். ’தோல் தாஷே’ என்ற மராத்தி படத்தை கடந்த 2 வருடங்களுக்கு முன் தயாரித்தவர் இவர். இதில் ஜிதேந்திரா ஜோஷி, ரிஷிதா பட் நடித்திருந்தனர். இவர் புனேவில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று காலை 11 மணி ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள், கதவை தட்டினர். திறக்காததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அதுல் தப்கிர் இறந்து கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இறப்பதற்கு முன் தனது பேஸ்புக்கில் தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்துள்ளார். அதில், ’படம் தயாரித்தது தொடர்பாக, எனக்கும் என் மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டது. வீட்டுக்குள் என்னை என் மனைவி அனுமதிக்கவில்லை. என் குழந்தைகளை பார்க்கக் கூட விடவில்லை. என் மனைவியின் சகோதரர்கள் என்னை அடித்துத் துன்புறுத்தினர். இதனால் இறப்பதை தவிர எனக்கு வேறு வழியில்லை’ என்று உருக்கமாகக் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close