[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

அடிபட்டு சொல்றேன், குடிக்காதீங்க: ரஜினி அட்வைஸ்

dont-depend-on-liquor-says-rajini

குடிபழக்கத்தை விட்டுவிடுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று கூறினார்.

சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசும்போது கூறியதாவது: குடும்பம், குழந்தைங்களை நீங்க பாத்துக்குங்க. குடி பழக்கம், புகைப்பிடிக்கிற பழக்கம் இருந்தா விட்டிருங்க. நான் அடிபட்டுதான் சொல்லிட்டிருக்கேன். ’கோடி கோடியா பணம் இருந்தது, குடிச்சே கெடுத்துட்டான்’னு சொல்வாங்க. நான் கூட யோசிப்பேன். அள்ளி அள்ளிக்கொடுத்தாலும் காலியாகாதே, குடிச்சா எப்படி போகும்?னு. அது என்னன்னா, குடி பழக்கத்தால உடம்பு மட்டுமல்ல, மனசு கெட்டுப்போயிரும். யோசனை, சிந்தனை, சக்தி வேற மாதிரி மாறும். அதனால வாழ்க்கையே அழிஞ்சு போகும். அதனாலதான் அப்படிச் சொல்லியிருக்காங்க. குடிப் பழக்கத்தை விட்டிருங்க. இல்லாதவங்க தொடாதீங்க. இருக்கறவங்க கண்டிப்பா விட்டிருங்கன்னு சொல்ல, நீங்கயென்ன யோகி, சித்தரா?
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

Advertisement:
Related Tags : Rajinikanth liquorliquor rajinikanth
Advertisement:
Advertisement:
[X] Close