[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

ரஜினிக்காக உருவாகும் தாராவி செட்!

rajinikanths-next

ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்துக்காக, சென்னை அருகே ரூ.5 கோடி செலவில் தாராவி செட் அமைக்கப்பட்டு வருகிறது.

’கபாலி’ படத்தை அடுத்து ஷங்கர் இயக்கும் ’2. 0’ படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படம், அடுத்த வருட ஜனவரியில்

வெளியாக இருக்கிறது. இதற்கிடையே ’கபாலி’யை இயக்கிய பா. ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் ரஜினி. இந்தப் படத்தை

நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. வரும் 28-ம் தேதி இதன் படப்பிடிப்புத் தொடங்க இருக்கிறது. படத்துக்காக, ரூ.5

கோடி செலவில் மும்பை தாராவி பகுதியை, அப்படியே உருவாக்குகின்றனர். தற்போது செட் வேலைகள் நடந்துவருகிறது. இன்னும்

இரண்டு வாரத்தில் இந்த வேலைகள் முடிவடையும் எனத் தெரிகிறது.

மும்பை தாதா ஹாஜி மஸ்தான் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது என்று கூறப்படுகிறது. இதிலும்

ரஜினிகாந்த் வித்தியாசமான கெட்டப்பில் வர இருக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close