[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

ரஜினியுடன் ராஜமவுலி இணைந்தால்? அவதார் ரெக்கார்ட் அவ்ளோதான்!

director-alphonse-said-rajinikanth-and-rajamouli-combo-will-break-avatar-record

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ரஜினி நடித்தால், ஜேம்ஸ் கேமரூனின் அவதார் பட ரெக்கார்ட் இரண்டாம் இடத்துக்கு செல்லும் என்று இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.

பாகுபலி2 படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து, அதன் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலிக்கு திரையுலகினர் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர. ரஜினிகாந்த் டிவிட்டரில் வாழ்த்து தெரிவிக்கும்போது, ’பாகுபலி 2 இந்திய சினிமாவின் பெருமை. கடவுளின் குழந்தையான ராஜமவுலி மற்றும் அவர் குழுவுக்கு சல்யூட் என தெரிவித்திருந்தார்.அதற்கு பதிலளித்த ராஜமவுலி, ’தலைவா. கடவுளே ஆசிர்வதித்தது போல் இருக்கிறது. இதை விட எங்களுக்கு வேறு எதுவும் பெரிதில்லை’ என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது முகப்புத்தகத்தில், ‘எஸ்.எஸ்.ராஜமவுலியும் ரஜினிகாந்தும் ஒரு படத்தில் இணைவார்கள் என நினைக்கிறேன். அப்படி நடந்தால், ’அவதார்’ பட வசூல் சாதனை இரண்டாம் இடத்துக்கு போய் விடும்’ என்று கூறியுள்ளார். ஏற்கனவே, ரஜினியை இயக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்று ராஜமவுலி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close