[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

இங்கயும் போஸ்டர், கட்-அவுட் கூடாதாம்: தேர்தல் அதிகாரி கறார்

no-poster-and-no-wall-post-in-producer-council-election

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போஸ்டர்கள் ஓட்ட, கட் அவுட்டுகள் வைக்கத் தடை விதித்திருக்கிறார் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அதிகாரியான எஸ்.ராஜேஸ்வரன்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு அடுத்த மாதம் 2-ம் தேதி தேர்தல் நடக்கிறது, சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்தத் தேர்தலை, ஓய்வு பெற்ற நீதிபதி, எஸ்.ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக இருந்து நடத்துகிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாக்குப் பதிவு நடைபெறும் இடத்தில் யாரும் செல்பேசியை பயன்படுத்த கூடாது. தேர்தல் அதிகாரி கையொப்பமிட்ட அடையாள அட்டையை கொண்டு வரவேண்டும். மூத்த உறுப்பினர்கள், உடல்நலம் சரியில்லாத உறுப்பினர்கள் மட்டும் தங்களுடன் உதவியாளர் ஒருவரை அழைத்துவரலாம். காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு எண்ணப்படும். தேர்தலில் போட்டியிடுபவர்களும் அவர்களுக்கு வேண்டியவர்களும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கக் கூடாது. கட்-அவுட், பேனர், வினையல் போர்டுகள் வைக்கக் கூடாது. வாட்ஸ்-அப், பேஸ்புக் தளங்களில் தனிநபர் விமர்சனம் கூடாது. இதை மீறுபவர்கள் தேர்தலில் நிற்க தகுதியற்றவர்கள்’ என்று கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close