[X] Close
JUST IN
சினிமா 14 Mar, 2017 10:52 AM

20 நிமிட டான்ஸ்: கவரலையே சன்னி லியோன்

sunny-leone-fans-upset

சன்னி லியோனின் 20 நிமிட நடனம் கவராததால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

புரி ஜெகநாத் இயக்கியுள்ள தெலுங்கு படம், ரோஹு. இஷான், மன்னாரா சோப்ரா, ஏஞ்சலா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பாடல் வெளியிடு ஐதராபாத்தில் நேற்று நடந்தது.

இதில் இந்தி நடிகை சன்னி லியோனை மேடையில் ஆட அழைத்திருந்தனர். இதற்காக, வழக்கமாக மேடை நிகழ்ச்சிகளில் ஆடுவதற்கு அவர் வாங்கும் தொகையை விட அதிகமாக கொடுத்தனர். எவ்வளவு பணம் என்பதை தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கவில்லை. ஐதராபாத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர்.

20 நிமிடம் மட்டும் ஆடினார் சன்னி லியோன். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அவர் நடனம் கவர்ந்திழுக்கவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் படத்தின் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ள ஏஞ்சலாவின் நடனம் ரசிகர்களை கவர்ந்ததாக ஐதராபாத் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
[X] Close