[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

ஆஸ்கர்: பிரிவினைச் சுவரை கண்டித்த கலைஞர்கள்

political-moments-in-oscar-2017

திரை உலகின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகர் நடிகைகள் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் பல கொள்கைகளுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர்.

அமெரிக்காவுக்குள் வெளிநாட்டவர் வர விதிக்கப்பட்டிருக்கும் தடை மனிதகுலத்துக்கு எதிரானது என்று ஆஸ்கர் விருதினை வென்ற தி சேல்ஸ் மேன் படத்தின் இயக்குனர் அஸ்கர் ஃபர்கார்டி விமர்சித்துள்ளார். இந்த தடையால் அவர் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஆஸ்கர் விழாவில் பங்கேற்க இயலவில்லை.

ஹாலிவுட் இயக்குனர் ஏவா டுவெர்னே வெளிநாட்டவருக்கு எதிரான தடைக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் முஸ்லீம் பெரும்பான்மை நாடான லெபனானை சார்ந்த ஆடை வடிவமைப்பாளரால் வடிவமைக்கப்பட்ட உடையை அணிந்திருந்தார். இது குறித்து டிவீட்டும் செய்தார்.

ஆஸ்கர் விழாவின் தொகுப்பாளர் ஜிம்மி கிமெல் மேடையிலேயே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கிண்டல் செய்தார். நிகழ்ச்சியின் தொடக்கதிலேயே, ஆஸ்கர் விழா நேரலையாக 225 நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான கணக்கான மக்களால் பார்க்கப்படுவதாகவும், ஆனால் அந்த மக்கள் அமெரிக்காவை தற்போது வெறுப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அவர், “நான் அதிபர் ட்ரம்புக்கு நன்றி கூற விரும்புகிறேன். சென்ற வருட ஆஸ்கரில் கருப்பினத்தவர்களுக்கு எதிரான இன பேதம் அதிகமிருந்ததாக சர்ச்சை எழுந்தது. தற்போது இல்லை. அவருக்கு நன்றி” என்றார்.

இத்தாலி நாட்டை சேர்ந்த ஒப்பனை கலைஞர் அலெசான்ட்ரா பெர்டோலாஸ்ஜி தனது ஆஸ்கரை புலம் பெயர்ந்து வாழும் அனைவருக்கும் அர்பணித்தார்.

சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கார் விருதை அளித்த மெக்சிகன் நடிகை கேல் கார்சியா பெர்நேல், மெக்ஸிக்கோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே சுவர் கட்டும் ட்ரம்ப்பின் திட்டத்தை கண்டித்தார். உலகம் முழுவதும் சென்று அங்குள்ள கதைகளை படமாக்கும் திரை உலகை சார்ந்தவர்கள் பிரிவினை உண்டாக்கும் எந்த சுவரையும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என அவர் கூறினார்.

சிறந்த டாக்குமெண்டரி படத்திற்கான ஆஸ்கரை தி வைட் ஹெல்மேட்ஸ் என்ற படம் வென்றது. சிரிய உள்நாட்டுப் போரில் மீட்பு செயல்களில் பணியாற்றும் தன்னார்வ அமைப்பான தி வைட் ஹெல்மேட்ஸ் பற்றிய படம் இது. இந்த விருது வழங்கபட்ட போது ஒரு வாழ்க்கையை காப்பாற்றுவது மனித இனத்தை காப்பதற்கு சமம் என்ற குர்ஆன் வாக்கியம் கூறப்பட்டது. அப்போது ஆஸ்கர் விழாவில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர்./p>

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close