[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது

விரைவில் விஸ்வரூபம் 2: கமல்ஹாசன்

kamalhaasan-tweet-about-vishwaroopam-2

விஸ்வரூபம் 2 படத்தின் தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் வெளிவரும் என்றும் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த விஸ்வரூபம் படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலையில் இறங்கினார் கமல்ஹாசன். படம் பல பிரச்னைகளால் நீண்ட நாட்கள் வெளிவராமல் இருந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வரும் கமல்ஹாசனிடம் அவரது ரசிகர்கள் விஸ்வரூபம் 2 படத்தின் ரிலீஸ் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு டுவிட்டரில் பதிலளித்த அவர், விஸ்வரூபம் 2 படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் விரைவில் நல்ல செய்தி வரும் என்று தெரிவித்தார். படத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய தடைகள் அனைத்தும் நீங்கிவிட்டதாகவும் தொழில்நுட்ப தடைகள் மட்டும்தான் மீதமிருப்பதாகவும் அதை தீர்க்க நானே களமிறங்கியுள்ளேன் என்றும் கமல் பதிவிட்டுள்ளார். இருந்தாலும் அனைத்து வேலைகளும் முடிய 6 மாத காலம் ஆகும் என்றும் அதுவரை காத்திருக்கவும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close