[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

பிப்ரவரி 26ல் விஜய்யின் தெறி....

theri-man-in-big-screen-from-26th-feb

புலி படத்திற்கு பிறகு, நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் “தெறி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மிரட்டலான காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி 5ம் தேதி வெளியாகி, யுடியூப் வலைதளத்தில் குறைந்த நேரத்தில் பல லட்சம் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ட்ரெய்லர் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தெறி படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெறி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் வரும் வெள்ளிக்கிழமை கணிதன் படம் வெளியாகிறது. அந்த திரையரங்குகளில் தெறி படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கணிதன் படம் விஜய் ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெறலாம் என கூறப்படுகிறது. ஒரு நிமிடம் 50 வினாடிகள் ஓடக்கூடிய தெறி படத்தின் ட்ரெய்லரை திரையரங்குகளில் ரசிகர்கள் காணலாம்.

வரும் ஏப்ரல் மாதம் தெறி படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெறி படத்தில் விஜய் ஜோடிகளாக சமந்தா, எமிஜாக்சன் நடிக்கின்றனர். பிரபு, ராதிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக நடிக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close