[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

பிலிம்பேர்... விருதுகளை அள்ளிய தங்கல் திரைப்படம்..!

dangal-gets-four-major-awards-best-actor-film-and-director-at-the-62nd-filmfare

62-வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா மும்பையில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. அதில் நடிகர் அமிர்கானின் தங்கல் திரைப்படம் சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருது என மூன்று முக்கிய விருதுகளை பெற்று சாதனை புரிந்துள்ளது.

அமிர்கான் நடிப்பில் புத்தாண்டு வரவாக வெளிவந்த ‘தங்கல்’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதுடன், இந்திய அளவில் வசூலில் 100 கோடியைத் தாண்டியது. இந்நிலையில், இப்படம் ஜியோ நிறுவனத்தால் நடத்தப்பட்ட பிலிம்பேர் விருது விழாவில் இந்த ஆண்டிற்கான சிறந்த திரைப்படம் என்ற விருதினை வென்றுள்ளது.

அதுமட்டுமின்றி, சிறந்த இயக்குனருக்கான விருது தங்கல் படத்தின் இயக்குனர் நிதிஷ் திவாரிக்கு கிடைத்துள்ளது. மேலும் சிறந்த நடிகருக்கான விருது தங்கல் நாயகன் அமிர்கானுக்கு வழங்கப்பட்டது. ஒரே படத்திற்கு மூன்று முக்கிய விருதுகளை பெற்று தங்கல் திரைத்துறையில் புதிய சாதனையை புரிந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close