[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நிலவின் சுற்றுவட்டப்பாதையை நெருங்குகிறது சந்திரயான் விண்கலம். காலை ஒன்பதரை மணியளவில் நிலவை சுற்றத் தொடங்கும் என இஸ்ரோ தகவல்
  • BREAKING-NEWS முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

தமன்னாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் சுராஜ்

tamanna-apologize-to-the-director-suraj

கத்திச் சண்டை படத்தில் தமன்னா கிளமராக நடித்தது குறித்து, பணம் கொடுக்கும் போது கிளாமரா நடிச்சா என்ன தப்பு என்று இயக்குனர் சுராஜ் பேசியதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தமன்னாவிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் கத்தி சண்டை. இப்படத்தில் ஹீரோயின் தமன்னா கிளாமராக நடித்திருப்பது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அப்படத்தின் இயக்குனர் சுராஜ், கமர்சியல் படம் எடுப்பது என்னோட பாணி, கமர்சியல் படத்துல ஹீரோயின் கிளாமரா நடிப்பதில் என்ன தவறிருக்கிறது. படம் பார்க்க வரும் ரசிகர்களை திருப்திப்படுத்தனும். அதுதான் என்னோட நோக்கம். படத்துல ஹீரோ சண்டை இருக்கனும், ஹீரோயின் கிளாமரா வரனும், அதுமட்டுமில்லாமல் ஹீரோயின் உடல் முழுவதும் புடவை கட்டிக்கொண்டு வரக்கூடாது. பணம் கொடுத்துத்தானே தியேட்டருக்கு வராங்க, தமன்னாவ கிளாமரா பாக்கலாம்னு வருகிறார்கள்... நடிப்பு திறமைக்கு வெளிபடுத்த படம் இருக்கு. இது கமர்சியல் படம், இதில் கிளாமராதானே இருக்கனும். கிளாமரா நடிச்சவங்கதான் இன்னிக்கு பெரிய ஹீரோயின்ஸா இருக்காங்க. ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கராங்க இல்ல.. கிளாமரா நடிச்சா என்ன தப்பு? வல்கரா இருக்க தேவையில்லை, ஆனா கிளாமரா இருக்கனும் என்று பேசியிருந்தார்.

இயக்குனர் சுராஜின் இந்தக் கருத்து, பெண்ணியவாதிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்தது. நடிகை நயன்தாராவும் பணம் கொடுப்பதால் மட்டும் ஹீரோயின்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது இல்லை என எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இயக்குநர் சுராஜ் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமன்னா கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் சுராஜ் தமன்னாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close