[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

பொங்கலில் வெளிவரவிருக்கும் 'எனக்கு வாய்த்த அடிமைகள்'

enakku-vaaitha-adimaigal-release-date

புதுமுக இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’. இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

’சேதுபதி’ படத்தை தயாரித்த வான்சன் மூவிஸ் நிறுவனம் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் காளி வெங்கட், ப்ரணிதா, கருணாகரன், ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட உள்ளதாக படக்குழுவினர் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

2017-ஆம் ஆண்டு பொங்கல் வெளியீட்டு பட்டியலில் பைரவா, புரூஸ்லி, குற்றம் 23, அதே கண்கள், சிங்கம் 3, எனக்கு வாய்த்த அடிமைகள் ஆகியவை உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close