[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

ஓகே ஜானு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த துல்கர்

congratulating-ok-janu-filmmakers-dulquer-salmaan

இந்தியில் ரீமேக்காகும் ஓ.கே. கண்மணி படக்குழுவினருக்கு துல்கர் சல்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் அன்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் 2015-ல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ஓ.கே. கண்மணி.

இந்தப்படம் மணிரத்தினம் மற்றும் கரண்ஜோஹர் தயாரிப்பில் இந்தியில் ஓகே ஜானு என்ற பெயரில் வெளிவர இருக்கிறது. ஆதித்யா ராய் கபூர், சர்தா கபூர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சாஹித் அலி இயக்கியுள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த ஓகே ஜானுவின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஓ.கே.ஜானு ஜனவரி 13 ஆம் தேதி வெளிவருகிறது. இந்நிலையில் ஓ.கே.கண்மணியில் நடித்த துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close