[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு

chennai-international-film-festival-postponed-to-next-month

சென்னையில் வரும் 15- ஆம் தேதி நடைபெறவிருந்த சர்வதேச திரைப்பட விழா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி ஜன.5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்பு காரணமாக திட்டமிடப்பட்ட தேதியிலிருந்து ஒத்திவைக்கப்பட்ட சென்னை சர்வதேச திரைப்பட விழா இந்த ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்டோ - சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் நடத்தப்படும் 14- வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இவ்விழாவில் மொத்தம் 165 படங்கள் திரையிடப் பட உள்ளன. அதில் தமிழ் திரைப்படங்களின் பிரிவில் ‘24’, ‘அம்மா கணக்கு’, ‘தேவி’, ‘தர்மதுரை’, ‘இறைவி’, ‘ஜோக்கர்’, ‘கர்மா’, ‘நானும் ரவுடிதான்’, ‘பசங்க - 2’, ‘ரூபாய்’, ‘சில சமயங்களில்’, ‘உறியடி’ ஆகிய 12 படங்கள் திரையிட தேர்வாகியுள்ளன. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அடுத்த மாதம் ஜனவரி 5- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close