[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

தமிழ் புத்தாண்டை குறி வைக்கும் "பவர் பாண்டி"

dhanush-powerpandi-movie-release-date-announced

தனுஷ் முதன்முதலாக இயக்கி இருக்கும் “பவர் பாண்டி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்,பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என நில்லாமல் “பவர் பாண்டி” படத்தின் மூலம் இயக்குனராகவும் தனுஷ் அவதாரம் எடுத்துள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகி வரும் “பவர் பாண்டி” படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில். 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இப்படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி சிறப்புதோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் எழுதி இயக்கி இருப்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ரசிகர்களை போலவே தனுஷும் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close