[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

ரஜினி விரைவில் நலம்பெற பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

pon-radhakrishnan-praise-rajinikanth

படப்பிடிப்பின் போது காயமடைந்த நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினி நடிக்கும் 2.0 திரைப்பட படப்பிடிப்பு சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் நடைபெற்று வருகிறது. அப்போது ஒரு காட்சியில் நடிக்கும் போது ரஜினி தடுமாறி விழுந்தார். இதனால் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் மயக்கமாக வருவதாக தெரிவித்ததால், ரஜினி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பரிசோதனைகளுக்கு பின் ரஜினியை ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில், ரஜினி விரைவில் நலமடைந்து தனது கலைப்பயணத்தை தொடர வேண்டும் என மத்திய அமைச்சர், பொன் ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close