[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

திரையுலகில் 25-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விஜய்-க்கு குவியும் வாழ்த்துகள்

24-years-of-vijay

இளைய தளபதி விஜய் திரையுலகில் 24 வருடத்தை கடந்து 25-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் #24YearsOfUnrivalledVIJAY என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் உருவாக்கி அதனை டிரெண்ட்டாக்கி வருகின்றனர்.

விஜய் ‘நாளைய தீர்ப்பு’ படம் மூலம் டிசம்பர் 4, 1992-ல் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். ஆரம்பகாலத்தில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் 1996-ஆம் வருடம் விக்ரமன் இயக்கத்தில் வெளியான ‘பூவே உனக்காக’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். திருமலை, கில்லி, போக்கிரி, துப்பாக்கி, கத்தி, தெறி என பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜய்-க்கு தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாது கேரளா சினிமாவிலும் ரசிகர்கள் பட்டாளம் கொடிகட்டிப் பறக்கிறது. இன்று தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் அளவுக்கு இவரது புகழ் உலகம் முழுக்க பரவியிருக்கிறது. விஜய்-யின் 24 வருட திரைப்பயனத்தை கொண்டாடும் வகையில் இன்று சில திரையரங்குகளில் இவரது படங்கள் திரையிடப்படவுள்ளது.

விஜய்-யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் துப்பாக்கி. இப்படத்தின் வசூல் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. தற்போதைய தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்று சொல்லப்படும் விஜய், இதுவரை மூன்று முறை 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளர். இவர் நடிப்பில் உருவாகி வரும் ‘பைரவா’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளிவரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே பல மடங்கு அதிகரித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : 24 years trending twitter vijay விஜய்
Advertisement:
Advertisement:
[X] Close