[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

'போகன்' இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு..!

bogan-audio-and-trailer-release-today

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘போகன்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் இன்று வெளியிடப்படவுள்ளது.

ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் இயக்குநர் லக்ஷ்மன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘போகன்’. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் இன்று வெளியிடப்படுகிறது. லக்ஷ்மன்-இமான்-ஜெயம் ரவி கூட்டணியில் கடந்த வருடம் வெளிவந்த ‘ரோமியோ ஜூலியட்’ படம் மற்றும் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் மற்றும் ‘டமாலு டுமீலு’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை பிரபு தேவா தனது தயாரிப்பு நிறுவனமான பிரபு தேவா ஸ்டுடியோஸ் மூலம் தயாரித்துள்ளார்.

மேலும் ஜெயம் ரவி-அரவிந்த் சாமி இனணந்து நடித்த ‘தனி ஒருவன்’ படம் சென்ற ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த நிலையில் மீண்டும் இவர்கள் கூட்டணி சேர்ந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close