[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

டிச.15ல் சென்னை சர்வதேச திரைப்பட விழா.. 12 தமிழ்ப் படங்கள் தேர்வு

14th-chennai-film-festival

சென்னையில் வரும் 15-ஆம் தேதி தொடங்கும் சர்வதேச சென்னை திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு ‘ஜோக்கர்’, ‘இறைவி’,‘ரூபாய்’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட 12 தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன.

உலக சினிமாக்களை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு, தமிழில் வெளிவந்த சிறந்த படங்களுக்கு வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விழா, வெற்றிகரமாக தனது 14ம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. சென்னையிலுள்ள உட் லாண்ட்ஸ் திரைப்பட வளாகம், ஐநாக்ஸ் திரையரங்கம், கேஸினோ, ரஷ்ய கலாச்சார மையம் மற்றும் ஆர்கேவி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனம் ஆகிய இடங்களில் படங்கள் திரையிடப்பட உள்ளன. இவ்விழாவில் மொத்தம் 165 படங்கள் திரையிடப் பட உள்ளன. அதில் தமிழ் திரைப்படங்களின் பிரிவில் 24, அம்மா கணக்கு, தேவி, தர்மதுரை, இறைவி, ஜோக்கர், கர்மா, நானும் ரவுடிதான், பசங்க - 2, ரூபாய், சில சமயங்களில், உறியடி ஆகிய 12 படங்கள் திரையிட தேர்வாகியுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close