[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடலை மெருகேற்றும் இசைப்புயல்

take-it-easy-song-will-be-back-soon

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த காதலன் படத்தில் இடம்பெற்றிருந்த ‘டேக் இட் ஈசி ஊர்வசி பாடல் புதுப்பொலிவுடன் உருவாக இருக்கிறது.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரபு தேவா, நக்மா, வடிவேலு ஆகியோர் நடித்த காதலன் படம் கடந்த 1994ம் ஆண்டு வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த காதலன் படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. குறிப்பாக பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் வெளிவந்த ’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல் ரசிகர்களிடம் இன்றளவும் பிரபலம். இந்தநிலையில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், அந்த பாடலை புதுப்பொலிவுடன் ஒரு மேடை நிகழ்ச்சியில் மீண்டும் மேடையேற்ற முடிவு செய்துள்ளார். இந்த தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஹ்மான், டேக் இட் ஈசி ஊர்வசி பாடல் வரிகளை இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்றவாறு எழுத ரசிகர்கள் பங்களிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பாடலில் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்தோ, பண மதிப்பிழப்பு விவகாரம் குறித்தோ எழுதாமல், நகைச்சுவை உணர்வு கொண்ட வரிகள் மூலம் அலங்கரிக்குமாறு ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுப்பொலிவுடன், நவீன இசைக்கருவிகள் உதவியுடன் மேம்படுத்தப்பட்ட டேக் இட் ஈசி ஊர்வசி பாடலை ரசிகர்கள் விரைவில் கேட்கலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close