[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

நடிகர் சங்க பொருளாளர் கார்த்திக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய ராதிகா

rathika-questions-in-karthik-twitter-account

நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவியை நீக்குவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

நீக்கம் குறித்து சட்டப்படி பார்த்துக்கொள்வதாக சரத்குமார் தெரிவித்திருந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தியின் ஹாஷ்டேக் குறிப்பிட்டு சில கேள்விகளை முன்வைத்துள்ளார்

அதில் கார்த்தி உங்களுக்கு வரலாற்றில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்க வரலாறு குறித்து உங்கள் தந்தையிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.. தனிப்பட்ட பகைமை காரணமாக எதையும் தீர்மானிக்க வேண்டாம். நீக்கம் குறித்து நடிகர் சங்க ஆடிட்டரிடம் இருந்து ஆட்சேபணை இல்லை என்று கடிதம் வாங்கினீர்களா?.. குற்றம் சாட்டுகிறிர்களே, எதையாவது இதுவரை நிரூபித்தீர்களா? இறுதி முடிவு எடுக்க நீங்கள் என்ன நீதிபதியா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஆயுட்கால உறுப்பினரான எனக்கு ஆதாரத்தைக் காட்டுங்கள். சங்கத்திற்காக கடுமையாக உழைத்தவர்கள் மீது தேவையற்ற அவதூறான குற்றச்சாட்டுகளை வைக்காதீர்கள். சங்க கணக்குகள் எதுவும் அளிக்கப்படவில்லை எனக் கூறுகிறீர்கள். தேர்தல் முடிந்ததும் நடிகர் சங்க தலைவர் நாசரிடம், தாஜ் ஓட்டலில் சரத்குமார் அனைத்து கணக்குகளையும் ஓப்படைத்துள்ளார். அது விடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளது. உங்களிடம் அளிக்கப்பட்டது என்ன காதல் கடிதங்களா?, நடிகர் சங்க கணக்குகளில் இருந்து ஏதற்காவாது விளக்கம் கேட்டீர்களா?, அப்படி கேட்டிருந்தால் நிரூபியுங்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கடிதம் வாயிலாக சரத்குமார் விளக்கம் கேட்டால், அவருக்கு முறைப்படி விளக்கமளிக்கப்படும் என்று நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close