[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

கபாலியால் நஷ்டம்?.. ரஜினியைச் சந்திக்க முயலும் திரையரங்க உரிமையாளர்கள்

kabali-movie-lass-in-trichy-and-thanjavur-area-in-theater-owners-complaint

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படம் கடந்த ஜூலை 22ம் தேதி வெளியானது.

இயக்குனர் ரஞ்சித் இயக்கியிருந்த காபாலி ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்டோருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இந்த படத்துக்கு தமிழ் சினிமா கண்டிராத வகையில், விமானத்தில் போஸ்டர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தாணு தயாரிப்பில் வெளிவந்த கபாலி படம் நல்ல வசூலை பெற்றதாகவும் கூறப்பட்டது. கபாலி திரைப்படம் பெரும் தொகைக்கு விநியோகிக்கப்பட்டதாகவும், முதல் நாள் டிக்கெட்டின் விலை அதிக விலைக்கு விற்கப்பட்டதாகவும் பட வெளியீட்டின் போது சர்ச்சை எழுந்தது. மேலும், படம் திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் பெரும் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பாளர் தாணு படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தின்போது பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியாக்களில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள், “கபாலி” திரைப்படத்தால் தங்களுக்கு சுமார் 2 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாகவும், இதற்காக நஷ்டஈடு வழங்க வேண்டும் என தாணுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர், இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அடுத்தகட்ட முயற்சியாக நடிகர் ரஜினியை, அவருக்குச் சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்க நேரம் கேட்க திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக அளவில் வசூலை வாரிக்குவித்த படம் என்று படக்குழுவினரால் கொண்டாடப்பட்ட கபாலி படத்தால், தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறியிருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close