[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

அடுத்தவர் குடும்பப் பிரச்சனைகளில் நடிகைகளுக்கு என்ன வேலை?..டுவிட்டரில் விளாசித்தள்ளிய ஸ்ரீபிரியா

sri-priya-tweet



தொலைக்காட்சிகளில் குடும்ப பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்த்து வைக்க நாம் நீதிபதிகள் அல்ல நடிகைகள். நாம் இப்படி செய்வதை நிறுத்த வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார் நடிகை ஸ்ரீபிரியா.

கேலி,கிண்டல்களுக்கு ஆளாகும் நடிகைகள்:

தனியார் தொலைக்காட்சிகளில் சில காலங்களாகவே குடும்ப பிரச்சனைகளை திரையுலகினர் பஞ்சாயத்து செய்யும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் போன்ற நடிகைகள் இந்நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றனர். இதனால் இவர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு கிண்டல்களுக்கும்,கேலிகளுக்கும் ஆளாகி வருகின்றனர்.

ஸ்ரீபிரியாவின் வேண்டுகோள்:

இது தொர்பாக ஸ்ரீபிரியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்க நீதிமன்றங்கள் இருக்கும் போது அதை தீர்க்க தொலைக்காட்சிகளுக்கு ஏன் வருகிறார்கள் என்று கேட்டுள்ளார். மேலும் அவர் பிரச்சனைகளை தீர்த்து வைக்க நாம் நீதிபதிகள் அல்ல நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது தயவு செய்து இப்படி செய்வதை நிறுத்துங்கள் என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

டுவிட்டரை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்:

லட்சுமி ராமகிருஷ்ணன் இது போன்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்பதால் சமூக வலைதளங்களில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார். அவர் நிகழ்ச்சியில் பேசிய “என்னம்மா இப்படி பண்றீங்களேமா..” என்ற வசனத்தை கிண்டல் செய்து பாடல்களும்,சினிமா வசனங்களும் வெளிவருகின்றன. சமீபத்தில் திரைக்கு வந்த “கடவுள் இருக்கான் குமாரு” படத்தில் ஒரு காட்சியில் நடிகை ஊர்வசி, ஆர்.ஜெ.பாலாஜி,ஜி.வி.பிரகாஷ், பாஸ்கர் மற்றும் ஆனந்தி ”பேசுவதெல்லாம் உண்மை” என்ற தலைப்பில் ஒரு டி.வி நிகழ்ச்சியை கிண்டல் செய்து நடித்திருப்பார்கள். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த லக்ஷ்மி ராமக்கிருஷ்ணன் டுவிட்டரை விட்டே வெளியேறினார்.

குஷ்புவால் நடந்த விபரிதம்:

தற்போது குஷ்புவும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் இதுபோன்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பாளர்கள் செட்டிலேயே ஒருவரையொருவர் அடித்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை ஒருமையில் பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close