[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டி
  • BREAKING-NEWS 2023-ஆம் ஆண்டுக்குள் தனியார் ரயில் சேவையைக் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூருக்கு வரும் நீரின் அளவு இன்று இரவுக்குள் 50 ஆயிரம் கன அடியை எட்டும் - ஜல்சக்தி துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS விலை உயர்வு: ரூ.8 லட்சம் மதிப்புள்ள 100 மூட்டை வெங்காயம் கொள்ளை!

’நிரந்தர நீக்கம் ஏற்புடையதல்ல’.. சரத்குமார் கருத்து

sarath-opens-about-nadigarsangam-issue

நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டிருக்கிறோம் என்பது ஏற்கக்கூடியதல்ல என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் விஷால் அறிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சரத்குமார், தற்காலிக நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கும் நிலையில், நிரந்த நீக்கம் என்று கூறுவது சட்டத்திற்கு உட்பட்டதல்ல என்று கூறியிருக்கிறார். நடிகர் சங்கத்தின் தன்னிச்சையான முடிவை சட்டத்தின் வாயிலாக நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காண இருப்பதாகவும், சரத்குமார் தெரிவித்திருக்கிறார். மேலும், ரசிகர்களும், தொண்டர்களும் பதற்றமின்றி அமைதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close