[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

விஷால் அலுவலகம் மீது கல்வீச்சு

stone-pedeled-actor-vishal-s-chennai-office

சென்னையில் நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து முன்னாள் தலைவர் சரத்குமார் மற்றும் முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோரை நிரந்தரமாக நீக்க பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டதாக விஷால் அறிவித்தார். இந்தசூழலில், வடபழனி குமரன் காலனியில் உள்ள நடிகர் விஷால் அலுவலகம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் அலுவலகத்தில் பணிபுரியும் இருவர் காயமடைந்ததாகவும், அதில் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் விஷால் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close