[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

திட்டமிட்டப்படி இன்று கூடுகிறது நடிகர் சங்க பொதுக்குழு

actor-association-general-meeting-started-in-chennai

சென்னை தி.நகர்‌ அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க நிலத்தில் திட்டமிட்டபடி பொதுக்குழுக் கூட்டம் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறும் என பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

சரத்குமார் தரப்பிலிருந்து பொதுக்குழுவிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டினால் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெறுவதாக இருந்த பொதுக்குழு, தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் இன்று நடக்க உள்ளது.

இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், சங்க பொதுக்குழு கூட்டம், சங்கத்திற்கு சொந்தமான மைதானத்திலேயே மதியம் 2 மணிக்கு துவங்கும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில், தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழா, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கொண்டாட்டம் உள்ளிட்ட பல நிக‌ழ்ச்சி நடக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

கூட்டத்தில் துணை நடிகர்கள், நாடக நடிகர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close