[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

’என் நிலைமையை நினைத்துப் பாருங்கள்’.. ஜாலி செல்வராகவன்

selvaraghavan-s-pondatti-oorukku-poitta

நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா பாடல் குறித்து தான் செல்வராகவன் இந்த கருத்தைத் தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு நெஞ்சம் மறப்பதில்லை பாடல்கள் வெளியிடப்பட்டது. இந்த ஆல்பத்தில் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலை எழுதியவர் வேறு யாருமில்லை படத்தின் இயக்குனர் செல்வராகவனே தான். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான அனைத்து பாடலுக்கும் இணையத்தில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பாடல் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட ரசிகர் ஒருவர், பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா பாடல் நன்றாக இருப்பதாகவும், ஆனால் தன் மனைவி இருக்கும்போது அந்த பாடலை கேட்க முடியவில்லை என செல்வராகவனுக்கு ட்வீட் செய்தார். இதற்குப் பதிலளித்து செல்வராகவன் கூறுகையில், கேட்கும் உங்கள் நிலையே அப்படி என்றால், என் நிலைமையை நினைத்துப் பாருங்கள் என்று ஜாலியாய் காலாய்த்துள்ளார். செல்வராகவனின் அந்த நகைச்சுவையான பதிலை யுவன்சங்கர் ராஜாவும் ரீட்வீட் செய்தார். ட்விட்டர் முழுக்க இந்த கான்வோ வைரலானது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close