[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

இது தான் அனிருத்....!

anirudh-sung-a-song-for-imman

குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றவர் இளம் இசையமைப்பாளர் அனிருத். அவருக்கென தனி பாணியையே ஆரம்பத்திலிருந்து கடைபிடித்து வருகிறார்.

தன்னுடைய ஆல்பம்களில் பாடுவதோடு மட்டுமில்லாமல் பல வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களுக்கும் அனிருத் தொடர்ந்து பாடி வருகிறார். அதிலும் திரைத்துறையில் பிரபல ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளர் மற்றவர்களுக்கு பாடி கொடுப்பது என்பது அனிருத்கே உரிய தனி பாணி தான்.

ரோமியோ ஜூலியட் படத்திற்காக இசையமைப்பாளர் இமான் இசையில் டண்டனக்கா பாடலை அனிருத் பாடியிருந்தார். அந்த பாடலும் சூப்பர் ஹிட் ஆனது. அதனைத் தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் உருவாகி வரும் போகன் படத்திற்காக இமான் இசையில் ’டமாலு முமீலு’ என்ற பாடலை அனிருத் பாடியிருக்கிறார். இந்த தகவலை இமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சிங்கிள் ட்ராக்கை வரும் 29-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் இமான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கொலைவெறி பாடல் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்தப்பின்னும், அலட்டிக்கொள்ளாமல் இசை, நட்பு, எளிமை என ‘இது தான் அனிருத்’ என கூறும் வகையில் தனக்கே தனக்கான ஸ்டைலை தொடர்ந்து வருகிறார்......!

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close