[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

நடிகர் விஷால் வீட்டில் டும் டும் டும் !

vishal-sister-marriage-soon

நடிகர் விஷாலின் திருமண செய்தி வெளியாகும் என எதிர்பார்த்திருந்த வேளையில் அவருடைய தங்கை ஐஸ்வர்யாவுக்கு திருமணம் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரியை நிர்வகித்து வருபவர் அவருடைய தங்கை ஐஸ்வர்யா தான். இவருக்கு உம்மிடி பங்காரு நகைக்கடை உரிமையாளர் குடும்பத்தைச் சேர்ந்த க்ரிடிஷ் உம்மிடி என்பவருடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. திருமணம் பேசி முடிக்கப்பட்டக் கையுடன் இரு குடும்பத்தினரும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று மாங்கல்யத்தை வைத்து பூஜை செய்து திரும்பியுள்ளனர். ஏற்கனவே சினிமாவில் நடிக்க பல முறை அழைப்பு வந்தும் ஐஸ்வர்யா மறுத்துவிட்டாராம். அவருக்கு அண்ணனின் அலுவலக நிர்வாக பணிகளின் மீது தான் விருப்பமாம்.

நடிகர் விஷால் உட்பட அவருடைய அண்ணன் விக்ரம் கிருஷ்ணா, அண்ணி ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் திருமண ஏற்பாடுகளில் தற்போதே மும்முரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. கூடிய விரையில் திருமண தேதி மற்றும் மாப்பிள்ளை குறித்த அதிகாரப்பூர்வமான செய்தியை நாம் எதிர்பார்க்கலாம். தங்கையுடைய திருமண வேலைகளுக்காக நடிகர் விஷால் சிறிது காலம் ஷூட்டிங்களுக்கு கூட செல்லப்போவதில்லையாம். பொறுப்பான அண்ணனாக அவதாரம் எடுக்கப்போகும் விஷாலுக்கு வாழ்த்துக்கள் !

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close