[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

இன்று மாலை நகர்வலம் ”எலி கதை” டீசர்...!

nagarvalam-eli-kadhai-teaser

காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான இளம் நாயகன் பாலாஜியின் நகர்வலர் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

இந்த டீசிரின் தலைப்பு ”எலி கதை Full Version டீசர்” என காமெடியாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் பாலாஜி, பசுபதி, பண்ணையாரும் பத்மினியும் புகழ் பாலசரவணன், ஆண்டவன் கட்டளையில் நம்மை கவர்ந்த யோகி பாபு, புதுமுக நாயகி தீக்சிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை மார்க்ஸ் இயக்கியுள்ளார். மெட்ரோ வாட்டர் லாரி என்றாலே சென்னை வாசிகளுக்கு சற்றே எரிச்சல் தான். ஆனால் இந்த படத்தில் மெட்ரோ வாட்டர் லாரி ட்ரைவர் தான் நாயகனே. இந்த லாரி ட்ரைவருக்கு தண்ணீர் விநியோக்கிக்க செல்லும் போது ஒரு ஏரியா பெண்ணுடன் ஏற்படும் காதல் தான் கதைக்கருவாம்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையில் நம்மால் நடிகர் பசுபதியை இந்த படத்தின் மூலம் பார்க்க முடியும். இதில் அவர் ஒரு பாடலுக்கு மாஸ்டர் கல்யாணின் கோரியோவில் நடனம் ஆடியிருக்கிறார். சென்னை மாநகரத்தின் ஒரு முகத்தை காட்டும் இந்த படத்தில் முழுக்க முழுக்க காமெடி சரவெடியை பார்க்கலாம் என்கிறது படக்குழு. இந்த படத்திற்கு இசை பவன், ஒளிப்பதிவு – தமிழ்தென்றல், படத்தொகுப்பு – மணிகண்ட பாலாஜி ஆகியோருடன் இனைந்து படத்தை சிடிசி மீடியாபாய் வெளியிடுகிறது.

நடிகர் பாலாஜியை நெருக்கமாக எங்கேயோ பார்த்தது போல இருக்கிறதா? விஜய் டிவியில் பல ஆண்டுகள் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரை யாராலும் மறக்க முடியாது தானே? அட அதில் எல்லோருக்கும் பிடித்த துடிப்பான மாணவனாக வரும் ஜோ தான் நம்ம நகர்வலம் நாயகன் பாலாஜி..!

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close