மலையாள படங்களில் அதிகம் இணைந்து நடித்த காவ்யா மாதவன், திலீப் ஜோடி நிஜ வாழ்க்கையில் கரம்கோர்த்துள்ளனர். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று காலை 9:30 மணிக்கு எளிமையாக இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சியை மலையாள செய்தி தொலைக்காட்சி லைவ் ஸ்டீரீமிங் செய்தது. நட்சத்திரங்கள் இருவரும் கேமராவுக்கு முன்பு மாலை மாற்றிக்கொண்டு வாழ்வில் இணைந்த சுவார்ஸ்யமான நிகழ்வை தொலைக்காட்சி மூலம் ரசிகர்கள் கண்டுகளித்துள்ளனர்.தம்பதியினர் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். திலீப் ஏற்கனவே மஞ்சு வாரியரை திருமணம் செய்து பிரிந்தவர். இவர்களுக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை இருக்கிறாள். 2011ஆம் ஆண்டு திருமணம் ஆன சில காலங்களிலே காவ்யா மதவன் விவாகரத்து பெற்று தனியே வாழ்ந்து வந்தார்.
பல நாட்களாக திலீப் காவ்யா இருவரும் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக செய்தி பரவி வந்தது. இந்நிலையில் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
எது எப்படியோ திரையில் ஜோடி சேர்ந்து கலக்கியதைப் போல வாழ்க்கையிலும் கலக்க நாமும் வாழ்த்தலாம்..!
கடைசி டி20 போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்
“அனுமதியின்றி எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம்”- ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்
உள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு - அரசிதழில் வெளியீடு
ரஜினி, கமலுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - டிடிவி தினகரன்
எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கின்றனர்: பிரதமர் மோடி