[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது குறித்து மாநிலங்களவையில் வாக்கெடுப்பு
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

சென்னையில் இன்று சினிமா படப்பிடிப்புகள் ரத்து

cinema-shooting-cancelled-today-in-chennai

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து சென்னையில் இன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சங்கத்தின் தலைவர் சிவா மீது தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் ச‌ங்கத்தினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று ஒரு நாள் பாடல் பதிவு, எடிட்டிங், டப்பிங் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் தேர்தல் 10 மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் புதிய தலைவராக பொறுப்பேற்றார். சங்கத் தலைவர் பிசி ஸ்ரீராம் மற்றும் நிர்வாகிகள், பெப்சி சிவா உள்ளிட்ட சங்கத்தின் முன்னாள் நிர்வாகத்தினர் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் ஊழல் முறைகேடு புகார் அளித்தனர். அந்தப் புகார் மனுவில், ‘2008 முதல் 2014 வரையிலான கணக்குகளை சரியாக ஒப்படைக்கவில்லை’ என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் ஊழல் முறைகேடு புகார் மனுவை கண்டித்து படப்பிடிப்பை இன்று ரத்து செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எஸ்.ஆர்.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close