[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

'ஏழையின் சிரிப்பில்', 'நினைவிருக்கும் வரை'... பட இயக்குனர் கே. சுபாஷ் மரணம்..!

director-k-subash-passed-away

‘கலியுகம்’ என்ற தமிழ் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த இயக்குனர் கே. சுபாஷ் இன்று உடல்நல குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 57 ஆகும்.

கே. சபாஷ் உத்தம புருஷன், சத்திரியன், பிரம்மா, ஏழையின் சிரிப்பில், நினைவிருக்கும் வரை, அபிமண்யு போன்ற தமிழ் படங்களுக்கு இயக்குனராகவும், சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, அக்ஷய் குமார் நடித்த எண்டர்டெயின்மென்ட் போன்ற சூப்பர் ஹிட் இந்தி படங்களுக்கு கதையாசிரியராகவும், பணிபுரிந்தவர்.

சுபாஷ் ‘நாயகன்’ படத்தில் மணிரத்னத்தின் உதவியாளராகவும் பணிபுரிந்துள்ளார். சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னை எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கே. சபாஷ், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்படவுள்ளது. இயக்குனர் சுபாஷின் மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close