[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

ரெட்டை குதிரையில் சவாரி செய்யும் வரலட்சுமி சரத்குமார்.

varalakhmi-sharathkumar

நீண்ட இடைவேளைக்குப் பின் வரலட்சுமி சரத்குமார் இரண்டு புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

சரத்குமாரின் மகள் வரலட்சுமி ”போடா போடி” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். போடா போடிக்குப் பின்னர் வெளியான தாரை தப்பட்டை படத்தில் தன்னுடைய நடிப்புத்திறனை நிருபித்தார் வரு. அதனைத் தொடர்ந்து ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், பிரசன்னாவுடன் வரு கதாநாயகியாக நடித்த நிபுணன் திரைப்படம் ரிலீஸ்க்கு தயார் நிலையில் உள்ளது. அத்துடன் மலையாளம், கன்னடம் என ஒரு சில படங்களை மட்டுமே வரு ஒப்புக்கொண்டு நடித்து வந்தார். பிற நடிகைகளைப்போல இல்லாமல் தனக்கு பிடிக்கும் கதைகளில் மட்டுமே வரு இதுவரை தன்னை இணைத்துக் கொண்டு வந்தார்.

இந்நிலையில் புஷ்கர் காயத்ரி இயக்க மாதவன், விஜய்சேதுபதி நடிக்கும் விக்ரம் வேதா படத்தில் கதாநாயகியாக கமிட் ஆன கையோடு இன்னொரு புதிய படத்திற்கும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார் வரு. சைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கவுள்ள திரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திற்கு வரு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இதில் வருவின் கதாபாத்திரம் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அனைவராலும் பேசப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Cinema cinemanews news tamil tamilnadu
Advertisement:
Advertisement:
[X] Close