[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

மின்சார ரயில் விபத்தில் உயிரிழந்த ராமாயண நடிகர்

mukesh-raaval-dead-news

ராமாயணம் தொடரில் விபீஷ்ணனாக நடித்து புகழ்பெற்ற நடிகர் முகேஷ் ராவல், மின்சார ரயில் விபத்தில் உயிரிழந்தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 65.

மும்பையில் மேற்குப்பகுதியில் உள்ள மின்சார ரயில் வழித்தடத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக ரயில்வேத் துறைக்கு நேற்று காலை 9 மணியளவில் தகவல் கிடைத்தது. இதுகுறித்து ஊடகங்கள் மூலம் ரயில்வேத் துறை செய்தி வெளியிட்டது. இதையடுத்து உயிரிழந்தது முகேஷ் ராவல் என்பதை அவரது குடும்பத்தினை இன்று காலை உறுதி செய்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள ராவலின் குடும்பத்தினர், அவர் நடித்துள்ள குஜராத்தி மொழி படத்திற்கு டப்பிங் பேசச் சென்றபோது ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான
ராமாயணம் தொடர் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள முகேஷ் ராவல், ஜித், சட்டா உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close