[X] Close
JUST IN

ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்த ’கொலவெறி’ பாடல்

5-years-of-kolaveri

தனுஷ்-அனிருத் கூட்டணியில் உருவான ‘கொலவெறி’ பாடல் 6-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

தனுஷ்-அனிருத் கூட்டணியின் முதல் படமான ’3’ படம், கடந்த 2012ம் ஆண்டு வெளிவந்தது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருந்த இந்த படம் மூலம் அனிருத் இசையமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கினார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘கொலவெறி’ பாடல் 2011ம் ஆண்டு நவம்பர் 16-ல் இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களைக் கவர்ந்த இந்த பாடல் மூலம் தனுஷ் மற்றும் அனிருத் ஆகியோர் உலகப் புகழ் பெற்றனர். யூடியூபில் மொழி பேதமின்றி இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடினர். கொலவெறி பாடலின் ஆறாம் ஆண்டு தொடக்கத்தை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டுள்ள இசையமைப்பாளர் அனிருத், தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். ’கொலவெறி’ பாடலை தற்போது வரை 11 கோடிக்கும் அதிகமானோர் யூடியூபில் கண்டுகளித்துள்ளனர். இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொலவெறி பாடலை ஷேர் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close