[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச நவ.29 இந்தியா வருகை
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS அவசியம் ஏற்பட்டால் நானும், ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 20-ல் வெளியீடு..

2-0-first-look-launched-in-nov-20th

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர் கூட்டணியில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் படம் ‘2.0’.

இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த பிரமாண்ட படைப்பின் ஃபர்ஸ்ட் லுக், நவம்பர் 20- ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 2.0 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் நடித்துள்ளார். அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்திருக்கும் 2.0 படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதற்காக மும்பையின் யாஷ்ராஜ் ஸ்டூடியோவில் பிரமாண்டமான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ரஜினி, ஷங்கர், அக்‌ஷய் குமார், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கும் இந்த விழாவை, பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் இந்த விழாவை லைகா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close