500,1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாடு முழுவதும் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த அறிவிப்பு திரையுலகிலும் பரவலாக எதிரொலித்தது. பணத்தட்டுப்பாடால் படத்தை எடுக்கவும், வெளியிட முடியாமலும் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷின் ’கடவுள் இருக்கான் குமாரு’, விஷாலின் கத்திச்சண்டை, ஜீவாவின் ’கவலை வேண்டாம்’, எஸ்.ஜே.சூர்யாவின் ’நெஞ்சம் மறப்பதில்லை’, விஜய் ஆண்டனியின் ’சைத்தான்’ ஆகிய படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் நாளை வெளிவரவிருக்கிறது. மற்ற படங்கள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்லாக்காசு அறிவிப்பு மற்ற துறையினரைப் போலவே திரைத்துறையினரையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
அசத்திய ரிஷப், ஸ்ரேயாஸ் ஜோடி - இந்திய அணி 287 ரன் குவிப்பு
“எதிரிக்கும் உதவி செய்” - ‘அன்புதான் தமிழ்’ என்ற அமைப்பை தொடங்கினார் லாரன்ஸ்
பழைய 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுள் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பு
“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா?” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா?
4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்