[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

டிசம்பர் 2ல் விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' ரிலீஸ்.. ?!

saithaan-movie-released-date-announced

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது நடிகராக வலம் வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சைத்தான்’ படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சிகள், வரும் நவம்பர் 17- ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் விஜய் ஆண்டனி தற்போது பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ‘சைத்தான்’ என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அருந்ததி நாயர் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, ‘சைத்தான்’ படத்தின் முதல் 5 நிமிட காட்சிகளை நவம்பர் 17- ஆம் தேதி திரையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இப்படம் டிசம்பர் 2- ஆம் தேதி ரிலீசாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close