[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

20% பணக்காரர்களுக்காக 80% மக்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துவது நியாயமா?: நடிகர் விஜய்

actor-vijay-about-pm-modi-announcement

20 சதவிகித பணக்காரர்களுக்காக 80 சதவிகித மக்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துவது நியாயமா என நடிகர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பும் அதேசமயத்தில் எதிர்ப்புகளும் கிளம்பி வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு குறித்து, சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய், 20 சதவிகித பணக்காரர்களுக்காக 80 சதவிகித மக்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துவது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கூறிய நடிகர் விஜய், பணம் எடுக்க முடியாமல் தவிப்பவர்களின் பிரச்னையை மத்திய அரசு விரைவில் தீர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடியின் அறிவிப்பு பொருளாதாரத்தை உயர்த்தும் என்பது நிச்சயம் என குறிப்பிட்ட நடிகர் விஜய், அதேசமயம் நோக்கம் நல்லது என்றாலும் பாதிப்பும் பெரிது எனவும் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close